India
PUBG பழக்கம்.. காதலாக மாறிய நட்பு: பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. மும்பையில் சிக்கிய வாலிபர்!
ஆன்லைன் கேமில் இளைஞர்கள் அதிகமாக விளையாடக்கூடிய ஒன்றாக இருப்பது PUBG. இதன்மூலம் நாம் மற்றொருவருடன் சேர்ந்துகொண்டு பார்க்காமலே விளையாட முடியும். இந்த விளையாட்டால் பல பேர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். தற்போது அதே போல் பெண் ஒருவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 33 வயதுடைய பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் PUBG விளையாட்டுக்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் அடிமையாகி உள்ளார். இந்த விளையாட்டு மூலம் இவருக்கு 35 வயது நபர் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர்.
இவர்களது நட்பு மிகவும் நெருக்கமாக மாறியது. இவர்களுக்குள் காதல் ஏற்படவே, அந்த பெண் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அந்த நபரும் தான் வேலை செய்யும் இடத்திலே அவருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். திருமணம் செய்வதாக கூறி இன்னமும் நெருக்கத்தில் இருந்துள்ளனர்.
இவ்வாறு இவர்கள் பலமுறை நெருக்கத்தில் இருந்தும் திருமணம் குறித்து பேசுகையில் அந்த நபர் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண், இவரிடம் சண்டையிடவே, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது இரகசியமாக மொபைல் போனில் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார்.
இவ்வாறு மிரட்டியே அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மிரட்டலுக்கு பயப்படாமல் துணிந்த அந்த பெண், இந்த சம்பவம் குறித்தும், தனது காதலன் குறித்தும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடனே நாத் வாலிபரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து அவரது மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு வேறு பெண்கள் யாரையாவது ஏமாற்றினார்? அந்த வீடியோவை வேறு யாருக்காவது அனுப்பினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. PUBG மூலம் பழக்கம் ஏற்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!