India
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அருவி அருகே Reels.. பாறை மேல் நின்ற இளைஞருக்கு நேர்ந்த கதி.. - VIDEO வைரல்!
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலை சார்ந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சூழலில் இளைஞர் ஒருவர் அருவி அருகே நின்று ரீல்ஸ் செய்யும்போது வழுக்கி விழுந்து நீர் அடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியை அடுத்துள்ளது பத்ராவதி. இங்கு சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் தனது நண்பர்களுடன் ஊர் சுற்ற சென்றுள்ளார். அப்போது உடுப்பி மாவட்டம் குந்தாபூர் அருகே உள்ள அரசினகுடி அருவியில் நீரை கண்டு ரசித்துள்ளார். மேலும் வெள்ளம் கரைபுரண்டும் சூழலில் அங்கிருக்கும் பாறையில் நின்று அழகை ரசித்தவாறே, ரீல்ஸ் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் பாறையில் வழுக்கவே, கால் இடறி வெள்ளத்தில் விழுந்து வெள்ள நீரில் விழுந்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், நீருக்குள் வழுக்கி விழுந்த இளைஞர் சரத்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் அருவி அருகே பாறையின் மேல் ஏறி ரீல்ஸ் செய்ய முயன்றபோது, இளைஞர் வழுக்கி விழுந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இளம் வயதுடையவர்களுக்கு இதுபோன்ற ரீல்ஸ் மோகம் விட்டபாடில்லை. தொடர்ந்து இது போல் விபரீத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!