India
குழந்தையை கவனித்து கொள்ள வந்த சிறுமி.. சூடு வைத்து கொடுமைப்படுத்திய பெண்.. நம்பவைத்து ஏமாற்றிய கொடுமை !
குஜராத் மாநிலம் அருகே இருக்கும் துவாரஹா என்ற பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா (33) - கவுசிக் பக்ஷி (36) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பூர்ணிமா, இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வருகிறார். அதே போல் அவரது கணவர் கவுசிக் பக்ஷியும் தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
எனவே குழந்தையை கவனித்து ஆள் நியமிக்க எண்ணியுள்ளனர் அந்த தம்பதியினர். அதன்படி டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை குழந்தையை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தியுள்ளனர். ஆரம்பத்தில் குழந்தையை கவனித்து கொண்டால் போதும் என்ற பூர்ணிமா, பின்னர் தனது வீட்டு வேலையையும் செய்ய சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவரை கொடுமை செய்து வந்துள்ளார் பூர்ணிமா. அதோடு அவரை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். சிறுமி ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர் என்பதால், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது குடும்பத்துக்கு தெரிவிக்கவில்லை. எனவே சிறுமியை பெரிய வேலைகளை செய்ய சொல்லியும் கட்டாயப்படுத்தி கொடுமை செய்து வந்துள்ளார் பூர்ணிமா.
இந்த சூழலில் ஒரு முறை மாடியில் வைத்து சிறுமியை பூர்ணிமா கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்த வழியே சென்ற சிறுமியின் உறவினர் ஒருவர் சிருறுமி தாக்கப்படுவதை கண்டுள்ளார். பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த சிறுமியின் பெற்றோர் ஞாயம் கேட்டு பூர்ணிமாவிடம் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பூர்ணிமா மற்றும் அவரது கணவரை, சிறுமியின் குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது நடந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து பூர்ணிமா மற்றும் அவரது கணவர் கவுசிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடல் முழுவதும் காயங்களோடு சேர்ந்து தீ காயங்களும் இருந்துள்ளது. மேலும் முகம், கை என சில பகுதிகள் வீக்கமாக இருந்துள்ளது. வீட்டில் இருந்த வேலைகளின் ஏதேனும் செய்யாவிடில், சிறுமியை பூர்ணிமா தாக்கி சூடு வைத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை கவனித்து கொள்ள பணிக்கு அமர்த்திய 10 வயது சிறுமியை, பெண் ஒருவர் அடித்து சூடு வைத்து கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!