India
மாயமில்லை.. மந்திரமில்லை.. கேரள வெள்ளத்தில் குடையை வைத்து மீன்கள் பிடித்த இளைஞர்.. இணையத்தில் வைரல் !
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இந்த முறை தாமதமாக தொடங்கிய மழையால் கேரள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கேரளா ஒரு மலை பிரதேசம் மிகுந்த இடம். எனவே அங்கு மழை நீர் பல பகுதிகளில் தேங்கி இருப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கிருக்கும் சில பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு சில இடங்களில் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் இந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பல அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கவும் அம்மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் இளைஞர்கள் சிலர் தடுப்பு பகுதியில் குடைகளை வைத்து மீன் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள கொட்டாரக்கரா பகுதியில் அமைந்திருக்கும் நீர் தடுப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் தூண்டில், வலை என்று எதுவும் இல்லமால், தாங்கள் கொண்டு வந்த குடை மூலம் மீன் பிடித்துள்ளனர்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த குடையை விரித்து ஓடும் தண்ணீருக்கு நடுவே வைக்கிறார். அப்போது அந்த நீரில் துள்ளும் மீன், அந்த குடையில் மாட்டிய பிறகு அதனை அருகில் இருக்கும் சாக்கில் போடுகிறார். இது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!