India
கத்தியால் குத்தப்பட்ட தக்காளி பாதுகாவலர்.. தக்காளியை திருடவந்தவர் வெறிச்செயல்.. கர்நாடகாவில் பரபரப்பு!
பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் விலை உயர்வால் தக்காளிக்கே போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என பலரும் கிண்டல் அடித்து வரும் நிலையில் பல இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஒரு கடையில் தக்காளி படைக்கு பௌன்சர்ஸ் வைத்து பாதுகாப்பது கொடுத்த சம்பவமும் நடைபெற்றது.
அதோடு நாடு முழுவதும் தக்காளி திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தற்போது, தக்காளியை பாதுகாத்து வந்த பாதுகாவலர் ஒருவர் தக்காளியை திருட வந்தவர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ரைய்ச்சூர் மாவட்டம் மாண்வி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தையில் வைக்கப்பட்டிருந்த தக்காளிக்கு ரஃபி என்பவர் நகராட்சி சார்பில் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கு நேற்று இரவு அவர் பணியில் இருந்தபோது அங்கு தக்காளியை திருட வந்த மர்மநபர் ஒருவர் பாதுகாப்பு இருந்த ரஃபியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தக்காளியோடு தப்பியோடியுள்ளார்.
இது குறித்து ரஃபி மாண்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் தக்காளி பாதுகாவலரை கத்தியால் குத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் கரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்தில் காயம் அடைந்த ரஃபி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!