India
தொடரும் தெரு நாய்கள் வெறிச்செயல்.. ஒரே நாளில் 4 பேருக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெரு நாய்கள், சிறுவன் ஒருவரை துரத்தி கடித்து குதறும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த மாதம் கூட கோழிக்கோடு பகுதியில் கூத்தளி பஞ்சாயத்து ஒன்றில் சிறுமி ஒருவரை தெரு நாய் ஒன்று துரத்தி தாக்கியதில், சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாய் துரத்துவதை கண்ட அக்கம்பக்கத்தினர், கல்லை எடுத்து விரட்டவே அந்த நாய் அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நாயை பிடிக்க அந்த கிராம மக்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.
இந்த சூழலில் குழந்தைகள் வெளியே செல்வது ஆபத்து என்பதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அதாவது கூத்தளி பகுதியில் உள்ள 17 அங்கன்வாடி பள்ளிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (10.07.2023) அன்று பள்ளிகள் தாமாகவே முன்வந்து விடுமுறை அளித்தது. இருப்பினும் தொல்லை கொடுத்து வந்த நாய் இன்னமும் பிடிபடவில்லை.
இந்த நாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகரிப்புக்கு அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. இருப்பினும் அது முழுமையாக ஓய்ந்தபாடில்லை. கடந்த ஆண்டும் கூட, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் விரட்டுவதால், முதியவர் ஒருவர் துப்பாக்கி பாதுகாப்புடன் மாணவர்களை பள்ளிக்கு கூட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?