India
கணவன் காணாமல் போன மறுநாள் மாயமான மனைவி, 2 பிள்ளைகள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி ! - நடந்தது என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி என்ற பகுதியை அடுத்துள்ளது விசாப்பூர் என்ற இடம் உள்ளது. இங்கு பரத் பாலேகர் - சுகந்தா பாலேகர் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா, ஸ்ரீ என்ற 2 ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், பரத் பாலேகர் அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார்; பிள்ளைகளும் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 2-ம் தேதி பரத் பாலேகர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. பரத் பாலேகருக்கு இப்படி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் பழக்கம் இருந்துள்ளது. அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. வழக்கமாக சென்று விட்டு வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணத்தில் அவரது மனைவியும் பெரிதாக அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து மறுநாள் ஜூலை 3-ம் தேதி சுகந்தா பாலேகர், தனது 2 பிள்ளைகளையும் பள்ளியில் கொண்டு போய் விட்டுள்ளார். பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. மேலும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் பிள்ளைகளும் வீடு திரும்பவில்லை. இதனால் யாரேனும் குழந்தைகளை கடத்தி விட்டனரோ என்று உறவினர்கள் பயந்துபோனர்.
தொடர்ந்து இதுகுறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்தே கணவர் காணாமல் போன மறுநாள் மனைவி காணாமல் போனதும், அன்று மாலை நேரத்தில் பிள்ளைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன குடும்பத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!