India
அசாம் : காவல்நிலையத்தில் சிறுமியின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளரின் செயலால் அதிர்ச்சி!
அசாம் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண விவகாரம் குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால், இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இவர்கள் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் இருவரும் எங்கு செல்வது என தெரியாமல் சுற்றித்திரிந்த நிலையில், இவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தங்கள் நிலை குறித்து இருவரும் போலிசாரிடம் கூறிய நிலையில், அவர்கள் அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த இளைஞரையும் சிறுமியையும் லாக் அப்பில் அடைத்துவைத்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியிடம் போலிஸார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும், காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரியும் பினன் ராய் என்பவர் சிறுமியின் ஆடையை பிற காவலர்கள் முன்னிலையில் களைந்து அதனை புகைப்படமாகவும் எடுத்துவைத்துள்ளார். அதோடு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர் சிறுமியின் அந்த இளைஞரிடமும், சிறுமியிடமும் இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல்நிலைய உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், இந்த சம்பவம் தெரியவந்தது.
அதனபின்னர் டிஐஜி காவல்நிலையத்தில் இது குறித்து விசாரணை நடத்த அந்த சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த பினன் ராய் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இது குறித்து முன்னரே அறிந்த பினன் ராய் தலைமறைவான நிலையில், அவரை தேடும் பணியில் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!