India
துக்க வீட்டில் வெடி வெடிக்க தகராறு.. நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை.. புதுச்சேரியில் அதிர்ச்சி !
புதுச்சேரி முதலியார்பேட்டை தியாக முதலியார் நகரைச் சேர்ந்தவர் ராஜி. 32 வயதான இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறது. இந்த சூழலில் நேற்று மாலை தேங்காய்திட்டுப் பகுதியில் உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றுள்ளார். அங்கே வானவெடி வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் நாங்களும் வானவெடி வெடிக்கிறோம் எனக்கூறியுள்ளனர். அதற்கு இவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ராஜிக்கும், அந்த வாலிபர்களுக்கும் தகறாரு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இரு கும்பலுக்கும் இடையே கைகலப்பாக மாறியதால், இது போலீஸ் புகார் வரை சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தங்களை தாக்கிய ராஜியை பழி வாங்க வேண்டும் என்று எண்ணிய அந்த கும்பல், அதற்கான திட்டத்தை தீட்டியுள்ளது. அதன்படி இந்த விவகாரம் முடிந்த பின் ராஜி, தியாக முதலியார் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த வாலிபர்கள் ராஜி வீட்டின் அருகேயே அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் நிலைகுலைந்த ராஜி சம்பவ இடைத்திலே துடிதுடித்து பலியானார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்குக் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த முதலியார்பேட்டை போலீசார், உயிரிழந்த ராஜியின் உடலை கைப்பற்றி உடற் குறைவுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று மாலை துக்க வீட்டில் நடந்த தகறாரில் ஈடுபட்ட வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்த ஹரி ஆகிய இருவரும் ராஜிவை நாட்டு வெடிகுண்டு வீசு கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த முதலியார்பேட்டை போலீசார் தப்பிச்சென்ற இருவரையும் தேடிவருகின்றனர்.
வெடிகுண்டு வீசி உயிரிழந்த மகனின் உடலை பார்த்த அவரின் தாயார் மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போல் பாஜக பிரமுகர் ஒருவர், பேக்கரி கடை முன் வைத்து நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் குற்றாவளிகள் 14 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?