India
சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரிகள்.. அதிகாலையில் நடந்த கொடூரம்.. டெல்லியை உலுக்கிய படுகொலையின் பின்னணி என்ன ?
டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் பிங்கி (30), ஜோதி (29) என்ற இரு சகோதரிகள் தங்கள் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சகோதரர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி அதனை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த சகோதரரின் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கேட்ட அந்த இரு சகோதரிகளும் வெளியே வந்து சம்பவத்தை பார்த்துக்கொண்டுள்ளனர்.
அப்போது சண்டை முற்றிய நிலையில், பணத்தை வாங்க வந்தவர்கள் தங்கள் எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது அந்த குண்டு குறி தவறி அருகில் நின்றுகொண்டிருந்த சகோதரிகள் மேல் பாய்ந்துள்ளது. இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி சகோதரிகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதனைக் கண்ட துப்பாக்கியால் சுட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சகோதரிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!