India
குஜராத்தின் இன்றைய கொடூரம்.. இங்கு எப்படி அசைவ உணவு சமைக்கலாம்? : நாகாலாந்து இளைஞர்கள் மீது தாக்குதல்!
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே மதரீதியான மற்றும் சாதிய ரீதியான கொடுமைகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில்தான் சிறுபான்மைமக்கள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட குஜராத் மாநிலத்தில் இளம் பெண்கள் காணாமல் போனதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று கூட குஜராத் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது பட்டியலின சிறுவன் ஒருவன் பந்தைத் தொட்டதற்காக அவரது கட்டை விரலை ஆதிக்க சாதியினர் வெட்டிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் அடங்குவதற்குள், அங்கு எப்படி அசைவ உணவு சமைக்கலாம் என கூறி நாகாலாந்தைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் கோஹிர் மற்றும் ஜமீர். இதில் ஜமீர் அகமதாபாத்தில் உள்ள One Stop North East Shop Food என்ற உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உணவகத்திற்கு வந்த மூன்று பேர் திடீரென ஜமீர் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு கார்க்கில் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த ஆறுபேர் பேஸ்பால் மட்டையால் ஜமீர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த அவரது நண்பர் கோஹர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குஜராத் ஒரு இந்து மாநிலம். இங்கு உங்களுக்குக் கோழி விற்கக் கூட அனுமதி இல்லை என கூறி இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதிக் தோபி, மகாவீர், ரோக்டோ ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரதிக் தோபியை போலிஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?