India
அதானியை பாதுகாக்கும் ஒன்றிய அரசு.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய வாஷிங்டன் போஸ்ட்!
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரபபை ஏற்படுத்தியது. இதையடுத்து அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என கூறினர். ஆனால் ஒன்றிய அரசு இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய தொண்டு நிறுவனங்களை பழிவாங்கும் நோக்கில் வருமான வரித்துறையை இந்திய அரசு ஏவி உள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது மற்றொரு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு இறுதியில், ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத 3 தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், சோதனைக்கு பின் வழக்கமாக வெளியிடப்படும் அறிக்கை எதனையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 3 தொண்டு நிறுவனங்களும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஹஸ்தியோ அரந்த் என்ற அடர்ந்த வனப்பகுதியில் அதானி நிறுவனம் நடத்தி வரும் நிலக்கரி சுரங்க முறைகேடுகளை அம்பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வனப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக இந்த தொண்டு நிறுவனங்கள் போராடி வந்ததாகவும், இதன் காரணமாக இந்த தொண்டு நிறுவனங்களை பழிவாங்கும் நோக்கில் வருமான வரித்துறையை இந்திய அரசு ஏவி உள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!