India

இன்று கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்.. 24 பேர் பதவியேற்பு: 9 பேர் புதியவர்கள்!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசைத் தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பல தொகுதிகளில் டெப்பாசிட் இழந்தது. மேலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு பா.ஜ.க தள்ளப்பட்டது.

பின்னர் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா மே 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். இவர்களுடன் எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர், பிரியங் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ் ,ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜராகிகோலி ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களின் பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, நிதிஷ் குமார், பூபேஷ் பாகல், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அசோக் கேலாட், தேஜஸ்வி யாதவ், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏற்கனவே 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் இன்று மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

ஹெச்.கே பாட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, செல்வ ராய ஸ்வாமி, கே.வெங்கடேஷ், டாக்டர் ஹச்.சி மாதேவப்பா, ஈஸ்வர் கான்ட்ரே,கேத்தசந்திரா என்.ராஜண்ணா, தினேஷ் குண்டு ராவ், சரணபசப்பா தர்ஷனாபூர், சிவானந்த்பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்.எஸ் மல்லிகார்ஜுன் தங்கடகி சிவராஜ் சங்கப்பா, டாக்டர் சரண பிரகாஷ், ருத்ரப்பா பாட்டீல், மங்கல் வைத்யா, லட்சுமி ஆர்.ஹெபல் கார், ரஹீம் கான், டி.சுதாகர், சந்தோஷ் எஸ்.லாட், என்.எஸ்.போஸ்ராஜு, சுரேஷா பி.எஸ், மதுபங்காரப்பா, டாக்டர் எம்.சி சுதாகர்,பி.நாகேந்திரா ஆகியோருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Also Read: எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்.. ஊக்குவித்த தமிழ்நாடு அரசு !