India
கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த நபர் !
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் சந்திர மோகன் (48). இவரது வீட்டின் கீழே அனுராதா என்ற 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கந்து வட்டி தொழில் செய்து வரும் இவர், கடந்த 2018 முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த சூழலில் கொடுத்த கடனை தொடர்ந்து கேட்டுள்ளார் அனுராதா. இதனால் சிறுக சிறுக கடனை கொடுத்து அடைக்க முயன்றுள்ளார் சந்திர மோகன்.
ஆனால் சந்திர மோகனால் அந்த கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. இருப்பினும் அனுராதா விடாமல் தொந்தரவு செய்துள்ளார். இந்த சூழலில் அனுராதாவின் தொல்லை தாங்க முடியாத சந்திர மோகன் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார். அதன்படி வழக்கம்போல் கடந்த 12-ம் தேதியும் அனுராதா, சந்திர மோகனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சந்திர மோகன், அனுராதாவை அடித்து தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் இறந்த உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர், கல் வெட்டும் இயந்திரம் மூலம் அனுராதாவின் உடலை 6 பகுதிகளாக வெட்டியுள்ளார்.
பின்னர் அந்த பகுதிகளை பிரிட்ஜ் ஒன்றில் பதப்படுத்தியுள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதால் ரூம் பிரஷ்நர் வாங்கி பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து துண்டாக்கப்பட்ட தலையை முதலில் அப்புறப்படுத்த எண்ணிய அவர், மே 17-ம் தேதி இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஒரு குப்பை தொட்டியில் அவரது தலையை கவருக்குள் வைத்து போட்டுள்ளார்.
இந்த சூழலில் மறுநாள் காலை துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பையில் கிடந்த தலையை கண்டு அதிர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதனை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சுமார் 10 நாட்களுக்கு மேல் தான் அந்த தலை அனுராதாவுடையது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் இருக்கும் பகுதிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது சந்திர மோகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் தனது குற்றத்தை சந்திர மோகன் ஒப்புக்கொண்டார். அதோடு அவரது வீட்டின் பிரிட்ஜில் இருந்த அனுராதாவின் உடல் பகுதிகளையும் மீட்டு ஆய்வுக்கு அனுப்பினர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் நாடு முழுவதும் உள்ள டெல்லி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில பகுதிகளில் ஏற்கனவே அரங்கேறி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!