India
பிறந்த நாளுக்கு முந்தைய நாள் இறந்த சிறுவன்.. சிறுவனின் ஆசையை நிறைவேற்ற திரண்ட நண்பர்கள் !
தெலங்கானா ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் குணவத் ராவ் மற்றும் லலிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் சச்சின் என்ற மகன் ஒருவர் உள்ளார். நன்றாக படிக்கும் இந்த மாணவர் அதிகமான நண்பர்களையும் கொண்டுள்ளார். இந்த சூழலில் சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை பிறந்தநாள் வந்துள்ளது. எனவே சிறுவன் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட எண்ணியுள்ளார். அதன்படி சிறுவனின் பெற்றோர், அவருக்கு பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கேக், நண்பர்களுக்கு அழைப்பு என எல்லாம் தயார் நிலையில் இருந்துள்ளது. ஆனால் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மாலை நேரத்தில், சிறுவனுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சிறுவனை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து சிறுவனின் பிறந்தநாள் அன்று காலை, அவருக்கு வாங்கி வைத்திருந்த புது துணியை அவருக்கு அனுவித்து, வாங்கி வைத்திருந்த கேக்கை அவரது முன்வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அனைவரும் கைதட்ட, சிறுவனின் கைபிடித்து பெற்றோர் கேக்கை வெட்டி கொண்டாடினர்.
பின்னர் அன்று முழுவதும் சிறுவனின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மறுநாள் சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பிறந்தநாளுக்கு முந்தைய நாள் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இது போல் சிறுவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!