India
இன்று முதலமைச்சராக பதவியேற்கும் சித்தராமையா.. 8 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யார் யார்?
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசைத் தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பல தொகுதிகளில் டெப்பாசிட் இழந்தது. மேலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு பா.ஜ.க தள்ளப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அடுத்து கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே போட்டி நிலவியது. பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். மேலும் சோனியா காந்தியிடமும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் பதவியேற்கும் 8 அமைச்சர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இதில், எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர், பிரியங் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ் ,ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜராகிகோலி ஆகியோர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அமைச்சர்களாக இவர்கள் பதவியேற்கின்றனர். இதில் பிரியங் கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!