India
“என் அம்மாவை கொன்ன மாதிரி அப்பாவையும் கொல்லுங்க..” - போலிஸ் மீது புகார் தெரிவித்த தெலங்கானா சிறுவன் !
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது வனஸ்தலிபுரம் என்ற கிராமம். இங்கு ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அங்கிருக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் இவர், உயர் நீதிமன்றத்தில் காவல் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சோபனா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சூழலில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை ராஜ்குமார் கை நீட்டி அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் இரகசிய தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனாலே இவர்கள் இருவருக்குள்ளும் அடிபிடி சண்டை நடந்து வந்துள்ளது.
மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ராஜ்குமார் கொடுமை செய்து வந்துள்ளார். ஆனால் மனைவி சோபனாவோ விவாகரத்து கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் இரு வீட்டாருக்கு தெரிந்து பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே பெண் வீட்டார் பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இருப்பினும் ராஜ்குமார் தனது மனைவியை மேலும் கொடுமை செய்து வந்துள்ளார். இதனை தனது பிறந்த வீட்டில் மனைவி சோபனா சொல்லி அழவே, அவருக்கு ஞாயம் கேட்டு, அவரது சகோதரர் ராஜ்குமார் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சண்டையிட்டுள்ளார். இதனால் பெருத்த அவமானம் அடைந்துள்ளார் ராஜ்குமார்.
இந்த ஆத்திரத்தில் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையை அவரது 15 வயது மகன் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. மாறாக சிறுவனுக்கும் காயத்தை ஏற்படுத்தி, மனைவியை தாக்கியுள்ளார் ராஜ்குமார். இதனால் பயந்து வீட்டை விட்டு ஓட முயன்ற சோபனாவை, ஆத்திரம் அடங்காமல் பின்தொடர்ந்து கத்தியை கொண்டு கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சோபனாவின் சடலத்தை கண்டதும், ராஜ்குமார் அங்கிருந்து தப்பித்து ஓடினார். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது 15 வயது மகன் வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் தனது அம்மாவை கொன்றது போல், தனது அப்பாவையும் கொல்ல வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார் சிறுவன். இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள காவலர் ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விவாகரத்து கேட்டு மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !