India
“அந்த மீசைக்கார Uncle தான்..” - 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. கம்பி எண்ணும் பள்ளி பியூன் !
பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடம் நாம் தினமும் படிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. பெண்களை குறிவைத்து சில ஆண்கள் இப்படி செய்வது உண்டு. ஆனால் சில இளைஞர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல் போதையில் வயதான பெண்களிடமும், மூதாட்டியிடமும் இவ்வாறு தகாத முறையில் நடந்துகொள்ளும் செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்னும் சில நபர்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றனர். அதில் அதிகமான குற்றங்கள் தலைநகர் டெல்லியில் தான் நிகழ்கிறது. மேலும் இது போல் சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள், அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலம் தான் நிகழ்கிறது. அந்த வகையில் 4 வயது குழந்தைக்கு 41 வயது நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி பியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும் தம்பதி ஒருவர், தங்களது 4 வயது மகளை அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளனர். அந்த சிறுமி பள்ளி சென்று சில நாட்களே ஆகும் நிலையில், அவருடன் அந்த பள்ளியில் பியூனாக இருக்கும் சுனில் குமார் என்பவர் பேசி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 9-ம் தேதி அந்த சிறுமியை தனியாக கூட்டி சென்றுள்ளார்.
அப்போது அந்த குழந்தையிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி கத்தி அழ தொடங்கியுள்ளார். சிறுமி அழுவதை கண்டு பயந்துபோன பியூன், அவரை மீண்டும் வெளியே கொண்டு போய் விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். பின்னர் மாலை வீட்டுக்கு சென்ற குழந்தை அழுது கொண்டிருந்தது.
அப்போது சிறுமியின் தாய் விசாரிக்கையில், தனக்கு நேர்ந்தவற்றை மழலை மொழியில் கூறியுள்ளார். மேலும் அந்த நபருக்கு பெரிய மீசை இருக்கும் என்றும் அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!