India
நிம்மதியாக வாழ காதலியை 2200 கிமீ அழைத்து சென்ற காதலன்.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய வழக்கு!
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று போக்ஸோ வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சரவண காந்தா சர்மா விசாரித்தார். அப்போது அவர் "இளமைப் பருவக் காதலை" நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது.போக்ஸோ வழக்குகளில் ஜாமீன் மறுப்பதா அல்லது வழங்குவதா என்பதைத் தீர்மானிக்கும் போது நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் பேசிய நீதிபதி, இந்த வழக்கின் மொத்த கதையும் ஒரு ரொமாண்டிக் நாவல் போலவும் திரைப்படம் போலவும் இருக்கிறது. தங்களின் உறவை ஏதோவொரு வகையில் இச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இருவரும் விரும்பியிருக்கின்றனர்.
அவர்களுக்கு வந்த ஒரே யோசனை குழந்தை பெற்றுக் கொள்வதுதான். இத்தகைய காதல் கதைகளை இந்த நாட்டின் சட்டம் ஆதரிக்காது எனத் தெரியாத மகிழ்ச்சி நிறைந்த அப்பாவியாக இளம்பெண் இருக்கிறார்.
குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர் அமைதியான வாழ்க்கை வாழ டெல்லியிலிருந்து 2200 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். போலிஸாரோ அல்லது குடும்பத்தினரோ தாங்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதைத் தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இவர்களது செல்போன் எண்கள் அணைக்காததால் எந்தவொரு குற்ற நோக்கத்திற்கும் எந்த ஆதாரமும் இல்லை. காதலுக்கு நிச்சயமாகக் காதலிப்பதற்கான வயது ஒப்புதல் குறித்து எல்லாம் புரியாது. டீன் ஏஜ் காதல் காரணமாக அப்பாவி இளையோரைச் சிறையிலடைப்பது அவர்களுக்கு அழுத்தத்தையும் உளவியல் சிக்கல்களையும் தரும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் காதல் ஜோடியில் இளம்பெண் கர்ப்பமுற்றதால் அவரது பெற்றோர் இளைஞர் மீது கொடுத்த போக்சோ வழக்கிலிருந்து ஜாமீன் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!