India

ஊர்வலத்தில் வைத்து மணமகளிடம் அத்துமீறிய மணமகன்.. இறுதியில் மணமேடையில் வைத்து நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் மாணிக்பூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கு உள்ள கலாச்சாரத்தின் படி மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டார் இரவு உணவு விருந்து அளித்துக்கொண்டிருந்தனர்.

இதனிடையே மணமக்கள் ஊர்வலமும் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் மணமகளை தொட்டு தவறான முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், மணமகள் வருங்கால கணவர் தானே என்று அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பின்னர் மணமக்கள் மேடைக்கு வந்தபோது மணமகன் மட்டும் தள்ளாடி நடந்து வந்துள்ளார். பின்னர் மணமகளின் நெற்றியில் குங்குமத்தை வைக்குமாறு மணமகனிடம் கூறப்பட்ட நிலையில், குங்குமத்தை மொத்தமாக எடுத்த மணமகன் அதனை மணமகளின் முகத்தில் பூசியுள்ளார்.

இதனைக் கண்ட மணமகனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மணமகனிடம் இது குறித்து விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் மணமகள் உடனடியாக தனக்கு அந்த மணமகன் வேண்டாம் என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ஆனால் இதனை ஏற்காத மணமகனின் உறவினர்கள் மணமகள் உறவினர்களை மண்டபத்தில் இருந்து வெளியேறவிடாமல் செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து இருதரப்பையும் சமாதானம் செய்தனர். ஆனாலும் மணமகள் உறுதியாக இருந்த காரணத்தால் இந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: முஸ்லீம் இட ஒதுக்கீட்டு ரத்து: “நீங்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு”-அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்