India
படகில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. உறவுக்காரரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பருந்தா என்ற கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் கடந்த மே 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள சித்தரகூட் என்ற இடத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இந்த ஊரில் சிறுமியின் குடும்பத்துக்கு முன்பே அறிமுகமான மனோஜ் யாதவ் என்ற இளைஞரின் வீடு இருந்துள்ளது. இரவு நேரமானதால் அந்த சிறுமியின் தாய் தனது மகளுடன் மனோஜ் யாதவ் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
சிறுது நேரம் ஆனதும் மனோஜ் யாதவ் சிறுமியை மட்டும் அங்கிருந்த மந்தாகினி நதிக்கரைக்கு தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் அந்த சிறுமியின் அத்துமீறிய நிலையில், இதனை அதே பகுதியில் இருந்த 5 சிறுவர்கள் கவனித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் வந்த சிறுவர்கள் மனோஜ் யாதவ் மற்றும் அந்த சிறுமி என இருவரையும் தாக்கி அங்கிருந்த படகில் ஏற்றியுள்ளனர். தொடர்ந்து படகை நதிக்குள் கொண்டு சென்ற இளைஞர்கள் அங்கு வைத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அதிகாலையில் இருவரையும் கரையில் விட்டுச்சென்று அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்று சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறிய நிலையில் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் மனோஜ் யாதவ் மற்றும் அந்த 5 சிறுவர்களை கைது செய்த போலிஸார் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!