India
தீவிர சிகிச்சையில் 4 வயது குழந்தை.. சாக்லேட் வாங்கி தருவதாக கூறி வன்கொடுமை செய்த 81 வயது முதியவர் கைது !
மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை அடுத்துள்ளது கஜோல். இதன் அருகே இருக்கும் கிராமத்தில் பங்கின் சந்திர ராய் என்பவர் வசித்து வருகிறார். 81 வயது முதியவரான இவர், அங்கே தனியாக வசித்து வருவதாக கூறபடுகிறது. அதே பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அதில் 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த 4 வயது குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்ததால் குழந்தையை சரி வர கவனிக்கவில்லை. இதையறிந்த பங்கின் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர், குழந்தையிடம் விளையாடியுள்ளார். பின்னர் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த குழந்தை மறுத்ததும், சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் குழந்தையும் முதியவருடன் சென்றுள்ளார். அப்போது அந்த தாத்தா, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு கூட்டி சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை அவரது வீட்டு வாசலிலே கொண்டு வந்து விட்டுள்ளார். சில நிமிடங்களிலே சிறுமி கதறி அழுதுள்ளார்.
பின்னர் அவரது பெற்றோர் விசாரிக்கையில் தனது அந்தரங்க பகுதியை காண்பித்து, வலிக்கிறது என்றுள்ளார் அந்த சிறுமி. இதையடுத்து பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், அந்த 81 வயது முதியவர் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த 4 வயது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 4 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கோரி பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவரின் செயல் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!