India
அழுதுகொண்டே இருந்த 5 வயது பெண் குழந்தை.. தாய் செய்த கொடூரச் செயலால் அதிர்ச்சியடைந்த போலிஸ்!
குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவரது மனைவி பில்கிஸ் கமானி. இந்த தம்பதிக்கு 5 வயதில் திவ்யாங் என்ற பெண் குழந்தை இருந்தார்.
இந்நிலையில், குழந்தை திவ்யாங்கின் உடல் நிலை மோசமாக இருந்ததைப் பார்த்த தந்தை அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி திவ்யாங் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார் பெற்றோர்களிடம் விசாரணை செய்தனர்.
அப்போது தாய் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், குழந்தையின் அந்தரங்க உறுப்பில் தொற்று இருந்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். இதன்காரணமாக எரிச்சலடைந்த தாய் பில்கிஸ் கமானி தான்பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் அவரை தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதில் குழந்தைக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் தாய் பில்கிஸ் கமானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 5 வயது பெண் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் தாய் தரையில் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!