India
17 லட்சம் ரூபாய் காரை இழுத்துச்சென்ற கழுதைகள்.. வைரலான வீடியோ.. கொதித்த நெட்டிசன்கள்.. வெளிவந்த காரணம் !
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர சங்கர்லால். இவர் அருகில் இருந்த கார் ஷோரூமில் 17 லட்சம் ரூபாய்க்கு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் இந்த காரை வாங்கியதில் இருந்து பல்வேறு கோளாறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது.
அதிலும் குறிப்பாக தொடர்ந்து ஸ்டார்ட்டிங் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் காரை ஸ்டார்ட் செய்யவேண்டும் என்றால் அதை சிலர் தள்ளித்தள்ளிதான் ஸ்டார்ட் செய்யவேண்டிய நிலை இருந்தது. இதனைத் தொடர்ந்து ஷோரூமில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதன்படி காரை பரிசோதனை செய்த ஷோரூம் பிரதிநிதி அவர் வாங்கிய காரில் பேட்டரி கோளாறு இருப்பதாகவும் காரை ஷோரூமுக்கு கொண்டுவருமாறும் கூறியுள்ளார். இதனால் சங்கர்லால் தனது நண்பர் ராஜ்குமார் என்பவரிடம் காரை ஷோரூமுக்கு எடுத்துசெல்லுமாறு கூறியுள்ளார்.
காரின் கோளாறு காரணமாக அதை எப்படி ஷோரூமுக்கு எடுத்துசெல்வது என யோசித்த ராஜ்குமார் இரண்டு கழுதைகளை வாடகைக்கு எடுத்து அதனை வைத்து காரை ஷோரூமுக்கு இழுத்துச்செல்ல வைத்துள்ளார். இதனை அந்த பகுதியில் சென்றவர்கள் விடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இதனை பார்த்த பல்வேறு விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரை கொண்டுசெல்ல பல்வேறு வழிகள் இருக்கும்போது கழுதையை வைத்து இழுத்துச் சென்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!