India
வீட்டின் முன் விளையாடிய சிறுவன்.. துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. இறுதியில் நேர்ந்த சோகம் ! CCTV
கர்நாடகா மாநிலம் கோலார் டவுன் அருகே இருக்கும் ரஹ்மத் நகரில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அவர்களுக்கு ஜாபர் என்ற 9 வயது மகன் உள்ளான். இந்த சிறுவன் வழக்கம்போல் நேற்றைய முன்தினம் தனது வீட்டின் முன் நின்று விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கு திடீரென தெருநாய்கள் கூட்டமாக வந்துள்ளன. சிறுவனை நோக்கி குறைத்துள்ளன. இதில் பதறிப்போன சிறுவன் அங்கிருந்து ஓட தொடங்கினான். இருப்பினும் விடாமல் துரத்திய நாய்கள் சிறுவனை கடித்து குதற தொடங்கியது. இதில் அலறி கத்தினான்.
அந்த சமயத்தில் அங்கு ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த போலிசார் சிறுவனை நாய் துரத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தாங்கள் கையில் வைத்திருந்த லத்தியால் தெரு நாய்களை துரத்தி அடித்தனர். பின்னர் இரத்த கோரங்களுடன் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் சிறுவன் யார் என்று என்பதை விசாரித்து அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த பெற்றோர் சிறுவனை கண்டு கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து விசாரிக்கையில், அந்த பகுதி சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போல் கேரளாவில் தெரு நாய்கள் தொல்லைகள் அதிகரித்து காணப்பட்டது. அதோடு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதே போல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே தெரு நாய்கள் தொல்லைகளை தடுக்க அம்மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுபோல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.
முன்னதாக இதேபோல் தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் 5 வயது சிறுவன் ஒருவர் தனது தந்தையை காண தனியாக சென்றபோது அங்கு வந்த மூன்று தெரு நாய்கள் சிறுவனை கீழே தள்ளி கடித்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி சிறுவனை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு படுகாயத்துடன் இருந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!