India
4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் கைது.. பதிண்டா ராணுவ முகாம் வழக்கில் திடீர் திருப்பம்!
பஞ்சாப்பில் பதிண்டா ராணுவ முகாம் உள்ளது. இங்குக் கடந்த 12ம் தேதி அதிகாலை மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ராணுவ முகாமில் உள்ள உணவு சாப்பிடும் அறையில் நடந்துள்ளது.
மேலும் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளில் மற்றொரு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதோடு 28 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி ஒன்று மாயமாகி இருந்தது.
இதனால் பஞ்சாப் போலிஸார் தீவிரமாக இந்த வழக்கை விசாரணை செய்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சிவில் உடையிலிருந்ததும் தெரிந்தது. இந்நிலையில், அதே ராணுவ முகாமை சேர்ந்த தேசாய் மோகன் என்பவர்தான் 4 ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பஞ்சாப் போலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் எந்த மாதிரியான பிரச்சனை இவர்களுக்குள் இருந்தது என்பதை போலிஸார் தெரிவிக்கவில்லை. அதோடு மாயமான துப்பாக்கியையும் தேசாய் மோகன்தான் திருடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!