India
தொகுப்பாளர் TO Miss India.. 19 வயதில் சாதனை படைத்த இளம்பெண்.. யார் இந்த நந்தினி குப்தா ?
ஆண்டுதோறும் இந்தியாவில் 'மிஸ் இந்தியா' படத்துக்கான போட்டி நடைபெறும். இந்த போட்டியில் திருமணமாகாத இளம்பெண்கள் கலந்துகொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் நிலையில், முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சுதந்திரம் கிடைத்த ஆண்டில் இருந்து (1947) இந்த போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த ஆண்டும் கூட கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி என்ற இளம்பெண், 2022-ம் ஆண்டுக்கான "ஃபெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட்" பட்டத்தை தட்டி சென்றார்.
அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற 'பெமினா மிஸ் இந்தியா 2023' போட்டியின் நிகழ்வின் இறுதிச் சுற்று நேற்று (ஏப்ரல் 15) மணிப்பூர் மாநிலம் இம்பாலில் குமன் லம்பாக் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் நந்தினி குப்தா பட்டத்தை தட்டி சென்றுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இரண்டாவது இடத்தை டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா என்பவரும், மூன்றாவது இடத்தை மணிப்பூரை சேர்ந்த தவுனோஜம் ஸ்டெரலா என்பவரும் பிடித்துள்ளனர். இதுவரை நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டிகளில் ராஜஸ்தான் கடந்த 2019-ல் முதல் முறையாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்போதுதான் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நந்தினி குப்தா ? :
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதுடைய நந்தினி குப்தா, தனது பள்ளி படிப்பை கோட்டாவில் இருக்கும் செயிண்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். அதன்பிறகு லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வந்த இவர், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். எனவே அவர் மாடலிங் செய்து வந்துள்ளார். மேலும் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சில நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார். பின்னர் தான் அழகி பட்ட போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டியதால் அதற்காக தன்னை தயார் செய்து வந்துள்ளார். தொடர்ந்து இதற்காக முயற்சி செய்து வந்த நந்தினி, தனது 19 வயதிலேயே மிஸ் இந்தியா பட்ட போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர் வெற்றி பெற்றதை அறிவிக்கப்பட்டதை அடுத்து மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், "உலகமே இதோ அவர் வருகிறார். வசீகரத்தாலும், அழகினாலும் எங்களை ஈர்த்து நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம். நந்தினி குப்தா, உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டதோடு, மிஸ் இந்தியா படத்தை வென்ற முன்னாள் அழகிகளான சினி ஷெட்டி, சினாட்டா சௌகான், மானசா வாரணாசி, மாணிகா ஷியோகந்த், மான்யா சிங், ஷிவானி ஜாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்தாண்டு மிஸ் இந்தியா பட்டத்தை நந்தினி வென்றதால், ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவிருக்கும் 'உலக அழகி போட்டியில்' இந்தியா சார்பில் இவர் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!