India
பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய்.. -காரணத்தை கேட்டு போலிசார் ஷாக்: புதுச்சேரியில் அதிர்ச்சி!
புதுச்சேரியை அடுத்த மூர்த்திகுப்பம் - புதுகுப்பம் கடற்கரையில் இன்று பச்சிளம் குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து கிருமாம்பாக்கம் போலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அதனை தோண்டி பார்க்கையில் குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிஞ்சு குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன் (32), அவரின் இரண்டாவது மனைவி சங்கீதா (24) ஆகியோர் தங்கள் குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். அந்த புகாரில், குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தை உள்ளது. இந்த சூழலில் சங்கீதாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் குளக்கரைக்கு அருகில் வந்து வசித்துள்ளனர். கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாகவும் அதன்பின் குழந்தை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த குழந்தை குறித்து அந்த தம்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்தபோது மணலில் புதைத்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரிந்து கதறி அழுதனர். தொடர்ந்து போலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புகாரில் கூறியதை போலவே கூறி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படவே கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தன் குழந்தையை தானே உயிரோடு புதைத்ததாக தாய் சங்கீதா அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்தார். மேலும் போலிசாரின் விசாரணையில் சம்பவத்தன்று இரவு கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு குடிபோதையில் இருந்த கணவன், இந்த குழந்தை யாருக்கு என மனைவியை தகாத வார்த்தைகளால் கூறி வசைபாடியுள்ளார்.
இதனால் மிகுந்த விரக்தியடைந்த சங்கீதா பிறந்த 29 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு மணலில் போட்டு புதைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தாய் சங்கீதவை கைது செய்த போலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே 29 நாட்களான பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்து கொன்றுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !