India
கேரளா : மயக்கமருந்து கொடுத்து கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை.. நம்பிச்சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை !
கேரள மாநிலம் கொல்லம் அருகே பரவூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சுபைர் ( 36) என்பருக்கு சில மாதங்களுக்கு முன்னர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் தனக்கு வேலை ஏதும் இருந்தால் சொல்லுமாறு கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முகம்மது சுபைர் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 10 லட்சத்தை முகம்மது சுபைரிடம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட முகம்மது சுபைர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கான நேர்முகத் தேர்வு நடப்பதாகவும் எனவே அங்கு வருமாறும் கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் அந்த ஹோட்டலுக்கு சென்ற நிலையில், அங்கு ஒரு அறையில் காத்திருக்குமாறு கூறி அந்த பெண்ணுக்கு மயக்கமருந்து கலந்த ஜூஸினை கொடுத்துள்ளார்.
ஜூஸ் அருந்திய அந்த இளம்பெண் மயக்கமடைந்த நிலையில், முகம்மது சுபைர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், அத்தனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்த நிலையில், வேறுவழியின்றி அந்த பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் முகம்மது சுபைரை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!