India
பூட்டிக்கிடந்த வகுப்பறை.. உடைத்து திறந்த மாணவிகள்.. உள்ளே குழந்தையுடன் இறந்துகிடந்த மாணவி.. நடந்தது என்ன?
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மரிபாடு மண்டலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இந்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
அவரால் கர்ப்பமான இந்த இளம்பெண் கர்ப்பமாக 6 மாதம் ஆன நிலையில் அதனை மறைக்க சிரமம் அடைந்துள்ளார். இதனால் யூடியூப் பார்த்து கர்ப்பத்தை கலைக்க முடிவுசெய்துள்ளார். அதன்படி கல்லூரி மாணவிகள் அனைவரும் இடைவேளையிலபோது வெளியே சென்றநிலையில், அந்த நேரத்தில் வகுப்பறையில் கர்ப்பத்தை கலைக்க நினைத்துள்ளார்.
அதற்காக வகுப்பறையில் கதவை உள்பக்கமாக பூட்டியவர் யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால் 6 மாத சிசுவை வெளியே எடுத்த நிலையில், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில், வகுப்பறையிலேயே மயங்கியுள்ளார்.
வெளியே சென்ற மாணவிகள் திரும்பிவந்து பார்த்தபோது வகுப்பு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது மாணவி மயங்கி இருப்பதையும், அவர் அருகே சிசு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவியையும் கருவையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிசு இறந்துவிட்டதாகவும், அதீத ரத்தப்போக்கு காரணமாக மாணவியும் ஏற்கனவே இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலிஸார் இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!