India
ராணுவ முகாமில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் நடந்த பயங்கரம்!
பஞ்சாப்பில் பதிண்டா ராணுவ முகாம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ராணுவ முகாமில் உள்ள உணவு சாப்பிடும் அறையில் நடந்துள்ளது. மேலும் உயிரிழந்த 4 பேர் யார் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சிவில் உடையில் இருந்ததாகவும் தெரியவருகிறது. இதனால் இந்த சம்பவத்தில் சில ராணுவ வீரர்கள் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதோடு இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என ராணுவ முகாமின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி ஒன்று மாயமாகியுள்ளது. இதனால் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம் என பஞ்சாப் போலிஸார் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!