India
சிறுவனிடம் நாக்கை நீட்டி முத்தமிடச்சொன்ன தலாய் லாமா.. திபெத் புத்தமத தலைவரின் இந்த செயலால் சர்ச்சை !
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே இருந்த நாடான திபெத்தை சீனா ஆக்ரமித்து சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவித்தது. ஆனால், திபெத்தின் அரசியல் தலைவரும் புத்த மதத்தலைவருமான தலாய்லாமா சீனாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து இந்தியாவில் அடைக்கலமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே வசித்து வருகிறார். அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் இந்தியா செய்து வருகிறது. தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததற்கு சீனா தற்போது வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
புத்த மதத்தலைவரான தலாய் லாமாவை அந்த மதத்தை சேர்ந்தவர்கள் தவிர பலரும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தலாய் லாமாவை சிறுவன் ஒருவர் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அப்போது சிறுவனை முத்தமித்த தலாய் லாமாவின் செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் சிறுவனின் உதட்டில் முத்தமிடும் தலாய் லாமா பின்னர் தனது நாக்கை நீட்டி சிறுவனை அதில் முத்தமிட சொல்லும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாக நிலையில் பலரும் தலாய் லாமாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தலாய் லாமா இதற்கு முன்னர் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தனக்குப் பின் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தலாய் லாமா மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !