India

மதம் மாற்றுவதாகக் கூறி தேவாலயங்கள் சூரையாடல்.. கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்வா கும்பல்கள்!

2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் அமைந்த பின்பு ஒவ்வொரு நாளும் சிறும்பான்மையினர், தலித் மக்கள் மீது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங்களில் இந்துத்துவா குண்டர்கள் சமீப காலமாக அதிகளவில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லீம் மற்றும் தலித் மக்கள் மீது வன்முறையை அரங்கேற்றி அவர்களது சொத்துக்களை சூறையாடியுள்ளனர். இந்நிலையில், மதமாற்றம் செய்கிறார்கள் என்று கூறி கிறிஸ்தவர்களின் மீதும் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதலை தொடங்கியுள்ளனர். கிறிஸ்தவர்களின் மீதான இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடைபெறுவது ஏற்கெனவே இருந்தது, சமீபகாலமாக மிகமோசமான அளவில் அதிகரித்து வருகிறது.

தேவாலயங்கள் மீது கற்களை வீசுதல், தீ வைத்தல், அமைதியாக நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் புகுந்து மதமாற்றம் நடை பெறுகிறது எனக் கூறி பாதிரியார்கள், கிறிஸ்தவ மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துதல், பாதிரியார்களை காவல்துறையின் உதவியுடன் கைது செய்தல் ஆகியவை நடந்து வருகின்றது. இதனால் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு பொழுதையும் அச்சத்துடன் கடந்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைதியாக பிரார்த்தனை நடைபெற்ற ஒரு வீட்டிற்குள் இந்துத்துவா குண்டர்கள் நுழைந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டனர். பிரார்த்தனையில் இருந்த கிறிஸ்தவ மக்கள், மீது தாக்கு தல் நடத்தி நாற்காலிகள் மற்றும் இசைக்கருவிகளை உடைத்து நொறுக்கினர்.

அதேபோல், பா.ஜ.க ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் காஜிபூரில் பா.ஜ.க தலைவர் யோகேஷ் சிங் தலைமையிலான இந்துத்துவா குண்டர்கள் மாநில காவல்துறையின் உதவியுடன் பிரார்த்தனை கூட்டத்திற்குள் புகுந்து இடையூறு செய்துள்ளனர்.

மேலும் மதமாற்றம் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல ராய்பரேலி பகுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் புகுந்த குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பின்னர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக காவல் துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிறிஸ்தவர்கள் பலரை கைது செய்துள் ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தொடுக்கும் இந்துத்துவா குண்டர்கள் மீது வழக்குத் தொடர காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. உண்மையில் ஆளும் பாஜக அரசின் ஆதரவு, காவல்துறை உதவியுடனேயே கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் அரங்கேறி வருகிறது. அத்துடன் பாஜக ஆளும் மாநிலங்களில் பாதிரியார்கள் தேவாலயத்திற்குள் நுழைவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் கட்டுப் பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.

Also Read: பிரதமரின் நிகழ்ச்சிக்கு வந்த பாஜகவினர் குடிபோதையில் பெண்களிடம் ரகளை.. 5 பேரை பிடித்து போலிஸார் விசாரணை!