India
பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நாய்.. கர்நாடகாவில் நடந்த அவலம்!
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள மகப்பேறு வார்டு அருகே கடந்த சனிக்கிழமையன்று நாய் ஒன்று பிறந்த பெண் குழந்தையின் உடலை கவ்விக் கொண்டு சுற்றித்திரிந்து வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனையின் பாதுகாவலர்கள் நிர்வாகத்திடம் இது பற்றி தெரிவித்துள்ளனர். மேலும் நாயை விரட்டி குழந்தை உடலை மீட்டனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாய் கடித்து குழந்தை இறந்ததா? அல்லது அதற்கு முன்பே இறந்ததா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாததால் அது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு மருத்துவமனை நிர்வாகம் இறந்த குழந்தை இந்த மருத்துவமனையில் பிறக்கவில்லை என்றும் எங்கோ பிறந்த குழந்தையை இங்கு எடுத்து வந்து பெற்றோர் போட்டுச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அருகே உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பச்சிளம் குழந்தையை நாய் கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!