India
வயிற்று வலியால் துடித்த 2 தோழிகள்.. சிகிச்சைக்கு சேர்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்திற்குட்பட்ட பட்ரமே கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டரு பாபு. அவரது மகள் ரக்ஷிதா. அதேபோல் இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ஆச்சார்யா. இவரது மகள் லாவண்யா.
இந்நிலையில் ஏப்ரல் 4ம் தேதி லாவண்யாவுக்கும், ரக்ஷிதாவுக்கும் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரது குடும்பத்தினரும் அவர்களை மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லியாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் தோழிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்களா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கைக்குப் பிறகு தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இரண்டு இளம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!