India
காதலித்த பெண் சுட்டுக்கொலை..கனடாவில் இருந்து வந்த ஆசையாக பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: ஹரியானாவில் அதிர்ச்சி!
ஹரியானாவில் உள்ள ரோஹ்டக் மாவட்டத்திலுள்ள பாலண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்த நீலம் (23) என்ற இளம்பெண் கல்லூரிப்படிப்பை முடித்து ஆங்கில தகுதித் தேர்வில் வெற்றிபெற்று கனடாவில் வேலை செய்து வந்துள்ளார். அவர் இந்தியாவை சேர்த்த சுனில் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அதன்பின்னர் காதலனுடன் வாழ நீலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா வந்துள்ளார். வந்தவர் சுனிலை சந்திக்க சென்ற நிலையில் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் நீலத்தின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், நீலத்தின் சகோதரி ரோஷ்னி தன்னுடைய சகோதரியைக் காணவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் வழக்கை பதிவு செய்த போலிஸார் இதுகுறித்து மேற்கொண்டு விசாரிக்காமல் இருந்துள்ளனர். இதனால் நீலத்தின் குடும்பத்தினர் மாநில உள்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து கூறியுள்ளனர், மேலும் ஊடகங்களில் இதுகுறித்து தகவல் வெளியான நிலையில், போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலத்தின் குடும்பத்தினர் சுனில் என்பவர் நீலத்தைக் காதலித்து இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலைசெய்துவிட்டதாக தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தனர். அதனை அடிப்படையாக வைத்து சுனிலை தேடியபோது நீலம் காணாமல் போன அன்று சுனிலும் காணாமல் போயுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சுனிலைத் தேடிக் கண்டுபிடித்து அவெரிடம் விசாரணை நடத்தியபோதுநீலத்தைக் கடத்திச் சென்று சுட்டு கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனது வயலில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி நீலத்தின் உடலைப் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர் கூறிய இடத்தில தோண்டிப்பார்த்த போலிஸார் நீலத்தின் உடலை மீட்டு DNA பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் சுனிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!