India
வீடு தேடி சென்ற கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் துப்பாக்கியால் சுட்ட 2 இளைஞர்கள்: கொடூரத்தின் பின்னணி என்ன?
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது சிராஸ்பூர். இங்குள்ள குடும்பம் தங்கள் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றை கொண்டாடிக் கொண்டிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 'குவான் புஜன்' (kuan pujan) என்று சொல்லப்படும் நிகழ்ச்சியை கொண்டாடினர். அந்த நிகழ்ச்சியின்போது இசையை அதிகமாக ஒலிக்க செய்துள்ளனர். மேலும் DJ இசையும் அந்த தெருவை அலறவிட்டன.
இதனால் அங்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மிகவும் தொந்தரவு அடைந்துள்ளனர். அப்போது அந்த குடும்பத்தின் பக்கத்து வீட்டில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் அதிக சத்தம் அவரது உடலுக்கு கேடு என்பதால் நிகழ்ச்சி நடக்கும் வீட்டிற்கு சென்று கூறியுள்ளார். சத்தத்தை குறைக்க சொல்லி அவர் கூறியதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் துப்பாக்கியை கொண்டு அந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து பயத்தில் தப்பியோடியுள்ளார். சம்பவமறிந்து பெண்ணின் குடும்பத்தார் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரவு சுமார் 12 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இதுகுறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் குக்ண்டு சிக்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்ணால் வாக்குமூலம் கொடுக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர். அப்போது அவரது தாய் சம்பவம் குறித்து கூறினார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்ட ஹரிஷ் மற்றும் அமித் ஆகிய 2 இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இசை சத்தத்தை குறைக்க சொல்லிய கர்ப்பிணி பெண்ணை 2 இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!