India

பீகார் : ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை.. பாஜக தலைவரின் கடையை கொள்ளையடித்து சென்ற இந்துத்துவ கும்பல் !

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு ராம நவமி ஊர்வலத்தின் போது உத்தர பிரதேசத்தில் மசூதிக்கு வெளியே இருந்த கடைகளில் ஏறிய சிலர் அங்கு காவி கொடிகளை கட்டி வன்முறையை தூண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பிஹாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு மதரஸாவுக்கு தீ வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் பலர் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது பீகாரில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் மஹாராஷ்டிராவை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹைதர் ஆசமின் ஷோரூம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான ஹைதர் ஆசம் பீகாரில் எலக்ட்ரானிக் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ராமநவமி நடந்த அன்று நடத்த வன்முறையில் இவருக்கு சொந்தமான இந்த ஷோரூமில் புகுந்த சிலர் கடையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவரின் கடையில் இருந்த மொபைல் போன்களையும் தொலைக்காட்சி பெட்டிகளையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. காரில் வைத்து மர்ம கும்பல் செய்த கொடூரம்” : பின்னணி என்ன ?