India
அதிவேகமாக மரத்தின் மீது மோதி நொறுங்கிய சொகுசு கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 6 இளைஞர்கள்!
ஹரியானா மாநிலம் ஹசாரின் அடம்பூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென மரத்தின் மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டபோது ஆறு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் புவேஷ் என்ற இளைஞர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார்.
இதையடுத்து அவரை அக்ரோஹாவில் உள்ள மகாராஜா அக்ரெசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் உயிரிழந்த சாகர், ஷோபித், அரவிந்த், அபினவ், தீபக், அசோக் ஆகிய ஆறு பேரின் சடலத்தையும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இவர்கள் பர்வாலா மற்றும் கிஷன்கர் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதும் திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது சாலை விபத்தில் ஆறு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
T20 உலகக்கோப்பைக்கு தயாரான வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா - தேர்வுக்குழு சொல்வது என்ன? : முழு விவரம்!
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடல் 2.0-விற்கு மகுடம் சூட்ட போகும் பெண்கள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!