India
5,805 கிலோ எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3 - M3 ராக்கெட் !
நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள் இதனை மாற்றி வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இணைந்தது.
இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா' நிறுவனம் (என்எஸ்ஐஎல்) வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை ஒன்வெப் இந்தியா - 1(one web india - 1 mission) என்ற பெயரில் எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசிக் கட்டமாக ஒன் வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக் கோள்கள் ஒன்வெப் இந்தியா - 2 இன்று எல்.வி.எம் 3 - எம்3 (Launch Vehicle Mark 3 (LVM3) - mission 3) ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட் இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும். இந்த ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும் 643 டன் எடையும் கொண்டது. திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனோடு, இந்த ராக்கெட் தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டின் மூலம் இதற்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் உட்பட 5 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வெற்றித் தடத்துடன் பயணிக்கும் இந்த எல்.வி.எம் 3 ராக்கெட்டானது தற்போது 6 வது முறையாக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கி.மீ தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87.4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளன. உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. இதனால் வணிக ரீதியாக அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியாவுக்கு பயன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!