India
இரவில் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர்.. காலையில் மனைவி எழுப்பியபோது காத்திருந்த அதிர்ச்சி!
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் சத்தியமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மனைவியுடன் சுல்தான் பேட்டைக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் பரோட்டா மற்றும் பிரைட் ரைஸ் பார்சல் வாங்கி வந்துள்ளார். பிறகு இருவரும் வீட்டிற்கு வந்த ஹோட்டலில் வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இருவரும் படித்து தூங்கியுள்ளனர். இதையடுத்து விடியர்காலையில் சத்தியமூர்த்தியை அவரது மனைவி எழுப்பியுள்ளார். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி அப்படியே இருந்துள்ளார். பிறகு உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரோட்ட ப்ரைடு ரைஸ் சாப்பிட்டதால்தான் சத்தியமூர்த்தி உயிரிழந்தாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாகவே பரோட்டா, பிரியாணி, ப்ரைட் ரைஸ், ஷவர்மா சாப்பிட்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாடு அங்கன்வாடி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்!” : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
-
ரூ.36.62 கோடி செலவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கலைஞர் இன்று இல்லை.. ஆனால் அவர் பேசப்படுகிறார் ”: எழுத்தாளர் இமையம்!
-
சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! : “முறைகேடு நடைபெறவில்லை” என உத்தரவு!
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!