India
Instagram-ல் ஆபாச மெசேஜ்.. முகவரி தேடிச் சென்று வாலிபரின் கண்ணத்தில் செருப்பால் அடித்த பெண் !
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வந்த பிறகு பெண்கள் மீதான ஆபாச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதன் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பலர் போலியான கணக்குகளைக் கொண்டு பெண்களை ஆபாசமாகப் பேசியும் படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய வாலிபரின் முகவரியைத் தேடிச் சென்று அவரை இளம் பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். இவருக்கு கல்யாண் என்ற வாலிபர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைக் கண்டு முதலில் ஆவேசப்பட்ட பெண், பின்னர் நிதானமாக அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரது முகரியை வாங்கியுள்ளார். மேலும் அவர் பேக்கரி கடையில் வேலை பார்த்துவந்ததையும் இப்பெண் தெரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து திடீரென அந்த பெண் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அந்த வாலிபரைச் சாலைக்கு இழுத்து வந்து செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றபோது, தனது இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதால் தேடி வந்து அடிக்கிறேன் என அவர்களிடம் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பெண்ணின் துணிச்சலுக்குப் பலரும் சமூகவலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!