India
மனைவி மீது கோபம்.. ஆத்திரத்தில் மாமியார் மூக்கை கடித்து துப்பி மருமகன் வெறிச்செயல்.. ம.பி-யில் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் மோர்னியா பகுதியை அடுத்துள்ளது சந்தப்பூர் என்ற கிராமம். இங்கு ரஹ்மத் பகேல் - ராம் விலாசி (55) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். திருமண வயது வந்தவுடனே சுந்தரிக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த ராஜூ பகேல் என்பவரது குடும்பத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. எனவே தங்கள் மகளை ராஜூ பகேலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் மகள் சுந்தரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து ஆரம்பத்தில் நன்றாக சென்றுகொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் நாளுக்கு நாள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
அதோடு ராஜு, அவரது மனைவி சுந்தரியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தரி, தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் குடும்பத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்ததையடுத்து சுந்தரியின் தாய் ராம் விலாசி, தந்தை ரஹ்மத் பகேல் ஆகியோர் தங்கள் மகளை பார்க்க சென்றுள்ளனர். அங்கே சுந்தரியிடம் சமரசம் பேச முயற்சித்துள்ளனர். இருப்பினும் தனது கணவரோடு தனக்கு வாழ விருப்பமில்லை என்று கூறி வந்தார் சுந்தரி. தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தாய், தந்தை மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மருமகன் ராஜு 5 பேர் கொண்ட கும்பலோடு அவர்களை இடைமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இது கைகலப்பாக மாறவே, மாமியார் என்றும் பாராமல், அவரது மூக்கை தனது பற்களாலே அறுத்தெறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரியின் பெற்றோர் விரைந்து இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து ராம் விலாசியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிக்சை வழங்கப்பட்டு வருகிறது. மனைவி இப்படி செய்வதற்கு காரணம் மாமியார் என்று நினைத்து மருமகன் அவரை தாக்கியபோது, மூக்கை அறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மீது உள்ள கோபத்தால் மாமியாரின் மூக்கை தனது பற்களால் அறுத்துள்ள மருமகனின் செயல் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!