India
முன்னாள் காதலனை கொன்ற காதலி.. உடலை நெடுஞ்சாலையில் வீசிய கொடூரம்: விசாரணையில் போலிஸ் அதிர்ச்சி!
மேற்குவங்க மாநிலம் துர்காப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கோபால்மத் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்டநிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பிறகு அங்க சென்ற போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தது யார்? என விசாரணை செய்தபோது அது பினாசிடி நாகபள்ளி பகுதியைச் சேர்ந்த வினாஷ் ஜன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரின் கைகள் கட்டப்பட்டு இருந்ததால் அவரை யாரோ கொலை செய்து உள்ளனர் என்பதை போலிஸார் உறுதிசெய்தனர். பின்னர் விசாரணை நடத்தியபோது உயிரிழந்த அவினாஷ் ஜன், ஆப்ரீன் கட்டூன் என்ற பெண்ணை காதலித்து வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
அவினாஷ் ஜன் ஆப்ரீனை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை அப்ரீன் காதலிக்காமல் பிட்டு குமார் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி தெரிந்தும் அவினாஷ் ஜன், ஆப்ரினை காதலித்து வந்துள்ளார்.
இதனால் அவரை கொலை செய்ய ஆப்ரீன் முடிவு செய்துள்ளார். அதன்படி அவினாஷ் ஜன்னை வீட்டிற்க விருந்துக்கு அழைத்துள்ளார். அப்போது அவரை அதிகமாகக் குடிக்கவைத்துள்ளார். போதையிலிருந்த போது தனது காதலர் பிட்டு குமார் சிங்குடன் சேர்ந்து கொண்டு அடித்து கொலை செய்துள்ளார் ஆப்ரீன்.
பின்னர் அவரது கைகளைக் கட்டி இருசக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று அருகே இருந்த தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் சேர்ந்து வீசியது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காதலர்கள் இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!