India
DJ சத்தத்தால் திருமண மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த மாப்பிள்ளை: துக்கத்தில் மூழ்கிய திருமண வீடு!
இப்போது எல்லாம் DJ இல்லாத திருமண நிகழ்ச்சிகளே இல்லை என்ற அளவிற்கு DJ பிரபலமடைந்து விட்டது. திருமண நிகழ்ச்சியில் DJ இசைக்கு இளைஞர்கள் ஒரே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாக இருப்பார்கள்.
ஆனால் இந்த DJ ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?. ஆனால் அதுதான் உண்மை. DJ சத்தம் காரணமாகத் திருமண மேடையிலேயே மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்திற்குட்பட்ட இந்தர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார். இவரின் திருமண நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. அப்போது DJ இசையும் அதிக சத்தத்தில் இசைக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான மாப்பிள்ளை சுரேந்திர குமார் DJ சத்தத்தைக் குறைக்கும்படி பல முறை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
பின்னர் மேடையில் மணமகளும், மணமகனும் மாலை மாற்றிக் கொண்ட சிறிது நேரத்திலேயே மணமகன் சுரேந்திர குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு இருவீட்டுக் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். DJ சத்தம் காரணமாகத் திருமண மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!