India
தெலுங்கானா : முன்னாள் காதலரிடம் பேசிவந்த காதலி.. நண்பன் என்று கூட பார்க்காமல் காதலன் செய்த கொடூரம் !
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஹர கிருஷ்ணா (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலேயே ஒரு வகுப்பில் படித்து நண்பர்களாக இருந்து வந்தனர். மேலும், ஒன்றாக தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. முதலில் நவீன் அந்த பெண்ணிடம் காதலை கூறிய நிலையில், அவரும் அதை ஏற்றுக்கொள்ள இருவரும் காதலித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த காதல் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்துள்ளது.
அதன்பின்னர் ஹரிஹர கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை கூற இருவரும் காதலித்து வந்துள்ளனர். முன்னாள் காதலர் நவீனுடன் காதல் முறிந்தாலும் அந்த பெண் தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளார். ஒருமுறை ஹரிஹர கிருஷ்ணாவும் அந்த பெண்ணும் ஒன்றாக இருந்தபோது நவீன் அந்த பெண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார்.
காதலி முன்னாள் காதலரிடம் பேசி வருவது ஹரிஹர கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை நேரில் அழைத்து பேச முடிவெடுத்துள்ளார். அதன்படி இருவரும் நேரில் சந்தித்து பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் அடிதடி நிலைக்கு சென்றநிலையில், ஹரிஹர கிருஷ்ணா முன்னாள் காதலன் நவீனை கொலை செய்துள்ளார். அதோடு ஆத்திரம் அடங்காமல் நவீனின் அந்தரங்க உறுப்பு, இதயம் போன்றவற்றை வெட்டி அதை காதலிக்கு புகைப்படம் எடுத்தும் அனுப்பியுள்ளார்.
பின்னர் நவீனின் உடலை ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையின் அருகே புதைத்துவிட்டு ஆந்திராவுக்கு தப்பிஓடியுள்ளார். மகன் திடீரென காணாமல் போனதை அறிந்த நவீனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இந்த கொடூர கொலை சம்பவம் வெளியே தெரியவந்தது. அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த நவீனை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!