India
வரவேற்பு நிகழ்ச்சியில் நடமாடிய இளைஞர்.. பொத்தென்று விழுந்ததில் நேர்ந்த சோகம் ! - பதற வைக்கும் வீடியோ
தெலங்கானா மாநிலம் நிர்மல் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது குபீர் மண்டல். இங்கே சித்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சித்தையா குடும்பத்தினர் ரிசெப்ஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர்களில் இருந்தெல்லாம் விருந்தினர்கள் வருகை தந்தார்கள். அப்போது இவர்களது உறவினரான முத்யம் என்ற 19 வயது இளைஞர் ஒருவர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இதில் ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் அவர் அனைவர் முன்பும் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டிருந்தார்.
மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே பொத்தென்று விழுந்தார். விழுந்ததில் அவர் எழுந்திருக்கவே இல்லை. கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்த அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். 19 வயது இளைஞர் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் நடமாடிகொண்டிருக்கும்போதே மயக்கமடைந்து உயிரிழந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அடிக்கடி நிகழ்கிறது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் மேடையிலேயே நடனமாடிக்கொண்டிருந்த நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்தில் சென்று கொண்டியிருந்தபோது 12 வயது சிறுவனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்
கடந்த மாதம் கூட மத்தியப் பிரதேசத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !