India
என்னடா இப்படி இறங்கிட்டீங்க.. திருமணத்திற்குப் பெண் வேண்டி 105 கி.மீ பாதயாத்திரை தொடங்கிய 90S கிட்ஸ்கள்!
திருமண விஷயத்தில் பெண்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பலருக்கும் திருமணத்திற்குப் பெண் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால் திருமணமாகாத இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது போல் தங்களுக்கும் திருமணத்திற்குப் பெண்கள் வேண்டி போராட்டம் நடத்தும் சம்பவம் தற்போது அதிகரித்து விட்டது.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரும் திருமணத்திற்குப் பெண்கள் வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர்.
தற்போது கர்நாடக மாநிலம், மண்டியா பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரும் திருமணத்திற்குப் பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்குக் காரணம் சில நாட்களுக்கு முன்பு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் மணமகன், மணமகள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் 800 பெண்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் 25 ஆயிரத்திற்கு மேல் பெண்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில்தான் மண்டியா பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாதயாத்திரை தொடங்கியுள்ளனர். நேற்று தொடங்கிய இவர்களது பாதயாத்திரை 105 கிலோ மீட்டர் சென்று மாதேஸ்வரன் மலையில் முடிவடைகிறது. இங்கு இருக்கும் கோவிலில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடந்த இருக்கின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!