India

உலகிலேயே மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் தாய்லாந்துக்கு முதலிடம்... முதல் 5 இடத்தில் இந்தியா !

உலகளவில் இந்தியா அதிகம் விபத்து ஏற்படும் நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதற்கு மோசமான சாலைகள் ஒரு காரணமாக இருந்தாலும், மோசமான ஓட்டுனர்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. போதிய பயிற்சி இல்லாத காரணத்தாலும், அதிக அலட்சியம் காரணமாகவும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

பொதுவாக சாலை விதிகளை ஓட்டுனர்கள் முறையாக பின்பற்றாததே இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடம் பிடித்துள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

'compare the market ' என்ற காப்பீடு நிறுவனம் ஒன்று உலகளாவிய பொது போக்குவரத்து பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2.17 புள்ளிகளுடன் தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

2.28 புள்ளிகளுடன் தென்னமெரிக்கா நாடான பெருவுக்கு இரண்டாம் இடமும், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் 2.28 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், 2.34 புள்ளிகளுடன் இந்தியா நான்காம் இடத்திலும் உள்ளது. அதே நேரம் இந்த பட்டியலில் 2.36 புள்ளிகளுடன் மலேசியா ஐந்தாம் இடத்தில் இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் 4.57 புள்ளிகளுடன் சிறந்த ஓட்டுனர்கள் உள்ள நாடாக ஜப்பான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 4.02 புள்ளிகளுடன் நெதர்லாந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், 3.99 புள்ளிகளுடன் நார்வே மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், எஸ்டோனியா, ஸ்வீடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் சாலை பாதுகாப்பில் அதிகமான விபத்துகள் ஏற்படும் நகரமாக இந்திய தலைநகர் புதுடெல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் மகனுடன் வீட்டில் முடங்கிய பெண்.. வெளியே சென்ற கணவருக்கும் அனுமதி மறுப்பு !