India
" உங்களுக்கு வெட்கமாக இல்லையா MiLord? ".. ஆளுநர் நியமனத்திற்கு மஹுவா மொய்த்ரா கடும் தாக்கு!
ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நேற்று குடியரசுத் தலைவர் திரிவுபதி முர்மு நியமனம் செய்து அறிவித்தார். இதில் 6 பேர் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 6 பேரில் ஆந்திர மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.அப்துல் நசீர். இவர்தான் அயோத்தி, பாபர் மசூதி, முத்தலாக் தடை, பண மதிப்பிழப்பு போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் ஒருவராக இடம் பெற்றிருந்தவர்.
இவரின் இந்த ஆளுநர் நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்மைக் காலமாகவே பா.ஜ.க அரசுக்குச் சாதகமாக இருந்து வரும் முன்னாள் நீதிபதிகளுக்குப் பதவிகள் கொடுக்கப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆளுநர் நியமனத்தின் மூலம் அது உறுதியாகியுள்ளது.
மேலும் ஏற்கனவே அயோத்தி வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய அமர்வை தலைமை தாங்கிய ரஞ்சன் கோகாய் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரை ஒன்றிய பா.ஜ.க அரசு மாநிலங்களவை உறுப்பினராக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உங்களுக்கு வெட்கமாக இல்லையா மைலார்ட்? என ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமனத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஹுவா மொய்த்ரா ட்விட்டரில், "கடந்த 2 மாதத்திற்குள் மற்றொரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மையான அரசாங்கம் உணர்வைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் அதை ஏற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா மைலார்ட்?" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!